இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம்

Date:

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த 51 சம்பவங்களும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 364 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி, சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்கள் 114, சிறுவர் பலாத்காரங்கள் 169 மற்றும் சிறுவர் திருமணங்கள் 9 என பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சம்பவங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர், இந்தச் சூழலை ஒரு “சமூகப் பேரழிவு” என்று வர்ணித்துள்ளார்.

, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த 53 சம்பவங்கள், பாலியல் வற்புறுத்தல் தொடர்பான 500 சம்பவங்கள், சிறுமிகள் மத்தியில் கருக்கலைப்பு செய்யப்பட்ட 3 சம்பவங்கள், சிறுவர் பலாத்காரங்கள் 42 மற்றும் சிறுவர்களை பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு தூண்டிய 321 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2025 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, சிறுவர் பலாத்காரங்கள் 98, பாலியல் வற்புறுத்தல் சம்பவங்கள் 545, சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் 160 மற்றும் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த சம்பவங்கள் 46 என பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடாகப் பதிவான சம்பவங்களை மட்டுமே குறிப்பதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.

2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மொத்தம் 9,613 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். இந்தத் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பிரத்யேகமான தேசிய கொள்கைகள் மிக அவசியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

இன்று பல பகுதிகளிலும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...

கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை!

பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட...

ரௌடி கோபுவிடமிருந்து எம்மை காப்பாற்றுங்கள்: மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்