வரும் வாரத்தில் ஷென்செனில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் பங்கேற்பார் என்பதை ரஷ்யா உறுதிப்படுத்தியதாக அரசு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
“ஜனாதிபதி புடின், ஜனாதிபதி ஷி மற்றும் ஜனாதிபதி டிரம்ப் ஆகியோருக்கு இடையே (நவம்பர்) 19 ஆம் திகதி ஒரு முத்தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு, ஏபெக் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஷென்செனில் நடைபெறும்,” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் டாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை நடைபெறவிருந்த இந்த பேச்சுவார்த்தைகள், இந்த நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான முதல் முத்தரப்பு சந்திப்பாகும்.
இந்த சந்திப்பை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தெற்கு சீன நகரத்தில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக தலைவர்கள் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, உலகளவில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் போர் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறும், ஆனால் உக்ரைனில் நடக்கும் மோதல் குறித்து விவாதிக்கப்படாது.




