கல்முனை உப பிரதேச செயலாளர் தன்னை “பிரதேச செயலாளர்” எனக் குறிப்பிடும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்வைப்பு

Date:

கல்முனையன்ஸ் போரம் சார்பில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (WRT/645/23) 2026.11.03 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
மனுதாரரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த எழுத்தாணை மனுவின் பிரதான விடயம், கல்முனை உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி, சட்டரீதியாக “பிரதேச செயலாளர்” அல்ல; மாறாக “உப பிரதேச செயலாளர்” (Assistant Divisional Secretary – ADS) என்ற பதவியிலேயே உள்ளார் என்பதாகும்.

இந்நிலையில் உப பிரதேச செயலாளர் ஒருவர் பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையும் சட்டபூர்வமான கடமைகளையும் தன்னிச்சையாகச் செயற்படுத்துவதற்கான அதிகாரம் இல்லாத நிலையில் தொடர்ந்து அவ் அதிகாரங்களை செயற்படுத்திக்கொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பிலும், உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள், பதவி முத்திரைகள் மற்றும் ஏனைய அரச அலுவலக ஆவணங்களில் தன்னை “பிரதேச செயலாளர்” எனக் குறிப்பிட்டு பயன்படுத்துவது தொடர்பிலும் இம்மனுவின் மூலம் நீதிமன்றத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டரீதியான பதவி நிலைக்கு முரணாக இவ்வாறான பதவிப் பயன்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான உரிய நீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவின் மூலம் கோரியுள்ளார்.

இன்றைய விசாரணையின்போது, குறித்த அதிகாரியின் பதவி மற்றும் அவர் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்திய பதவிப் பெயர் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டதுடன், அவற்றின் சட்டரீதியான நிலை தொடர்பான விடயங்களும் மனுதாரரின் சட்டத்தரணியால் மன்றில் முன்வைக்கப்பட்டன.

மேலும் குறித்த அதிகாரி ஓர் அரச உத்தியோகத்தராகப் பதவி வகித்துவரும் நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக வழக்கில் ஆஜராக மறுத்துள்ள சூழ்நிலையில், தனிப்பட்ட (Private) சட்டத்தரணி ஒருவரை நியமித்து இவ்வழக்கு நடவடிக்கைகளில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருவது தொடர்பான விடயமும் அன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளின்போது குறிப்பிடப்பட்டது.

குறித்த வாதம் ஜனாதிபதி சட்டத்தரணியால் சுமார் ஒன்றரை மணித்தியாலயங்களுக்கு மேல் தொடர்ந்த சமர்ப்பணமாக அமைந்திருந்தது.  இவ்வழக்கின் சட்டரீதியான முக்கியத்துவம் கருதி மனுதாரர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான மேலதிக மற்றும் முழுமையான வாதங்களுக்காக 13.01.2027 ஆம் திகதி வழக்கு ஒதுக்கப்பட்டு, அன்றைய தினம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்