உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

Date:

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28) கடந்த அக்​டோபர் 9 அன்று ஒரு குடியிருப்பு கட்​டிடத்​திலிருந்து கீழே விழுந்து உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக, மாடல் அழகி​யும் சோஷியல் மீடியா பிரபலமுமான ஷ்ரத்தா துபே (31), அவரது சகோ​தரி ரஷ்மி துபே மற்​றும் அவர்​களின் ஓட்​டுநர் தன்​வீர் அலி (எ) டேனிஷ் ஆகியோர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்து அவர்​கள் மூன்று பேரும் கான்​பூர், ஆக்ரா மற்​றும் நேபாளம் ஆகிய இடங்​களுக்கு தப்​பிச் சென்று இறு​தி​யாக மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூர் வந்​தடைந்​துள்​ளனர். உத்தர பிரதேச காவல் துறை​யினர் அளித்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், நாக்​பூர் குற்​றப்​பிரிவு காவல்துறை இந்த மூவரை​யும் கைது செய்​தனர்.

நாக்​பூர் குற்​றப்​பிரிவு மூத்த காவல் ஆய்​வாளர் சுபாங்கி தேஷ்​முக் தலை​மையி​லான குழு மற்​றும் சிறப்பு அதிரடிப் படை அதி​காரி​கள், கைது செய்​யப்​பட்ட மூவரை​யும் முதன்மை நீதித்​துறை நடு​வர் சமீர் சத்​தா​ராம் காமத் முன்​னிலை​யில் நேற்று பிற்​பகல் 2:30 மணி​யள​வில் ஆஜர்​படுத்​தினர்.

வழக்கை விசா​ரித்த நீதிபதி அவர்​களை உ.பி. அழைத்​துச் செல்ல அனு​மதி வழங்கி உத்​தர​விட்​டார். ஷ்ரத்​தாவும் உணவக உரிமை​யாளர் சிவா சர்மாவும் திரு​மணம் செய்து கொள்​ளாமல் ஒன்​றாக வாழ்ந்தனர். இந்த நிலை​யில், அவர்​களது குடி​யிருப்​பின் 4-வது மாடியி​லிருந்து கீழே விழுந்து உயி​ரிழந்​தார்.

இது முதலில் விபத்து என கருதப்​பட்ட நிலை​யில், சிவா சர்​மா​வின் தாய் கொடுத்த புகாரையடுத்து அக்​டோபர் 10-ல் இது கொலை வழக்​காக மாற்​றப்​பட்​டது.

ஆனால், சிவா சர்​மா​வின் மரணத்​தில் தனக்கு எந்​தப் பங்​கும் இல்லை என்​றும், நிதி நெருக்​கடி காரண​மாகவே அவர் தற்​கொலை செய்​து​கொண்​டார் என்​றும் ஷ்ரத்தா மறுப்பு தெரி​வித்​துள்​ளார். மேலும், சிவா சர்​மா கடன் தொல்லையால் உயிரை மாய்த்​துக் கொள்​ளப் போவதாக கூறிய​தாக​வும்​ ஷ்ரத்தா தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை...

திலீபன் சிலை வைத்தவர்கள் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்வார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினரான 'திலீபன்' என்றழைக்கப்படும் இராசையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்