இலங்கைக் காதலனிடம் ஏமாந்த 40 வயது ஜேர்மன் பெண்!

Date:

மீன்பிடிப் படகு வாங்குவதற்காக 29 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவருக்கு 25,000 யூரோக்களை வழங்கிய நிலையில், அவர் தன்னைத் தாக்கியதாக 40 வயதுடைய ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவர் ரத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரின் தகவல்படி, குறித்த பெண் முன்னதாக இலங்கைக்கு வந்திருந்தபோது, ​​பூஸா – பிட்டிவெல்ல பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞருடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

அவர்களது உறவின்போது, ​​மீன்பிடிப் படகு வாங்குவதற்காக அந்தப் பெண் அவருக்கு 25,000 யூரோக்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்த அந்தப் பெண், பூஸாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த இளைஞர் மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியதுடன், மரக்கட்டையால் தன்னைத் தாக்கியதாகவும், தனது கைப்பேசியைச் சேதப்படுத்தியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

தான் வழங்கிய 25,000 யூரோக்களை மீட்டுத் தருமாறு அவர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்