அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
“அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரங்களைக் கைவிட்ட ஒருவன் நான். எனது பதவிக்காலத்தையும் நான் குறைத்துக்கொண்டேன். இருப்பினும், பின்னர் ஆட்சிக்கு வந்தவர்களால் அவை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டன,” என்று சிறிசேன ஊடகங்களிடம் கூறினார்.




