கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

Date:

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person) கலந்துகொள்வதற்காக, பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியாவிற்குப் பயணமாகிறார்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜிநகரில் (ഔரங்காபாத்) உள்ள மகாத்மா காந்தி மிஷன் (MGM) பல்கலைக்கழக வளாகத்தில் வரும் ஒக்டோபர் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் இம்மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மகாத்மா காந்தி மிஷன் (MGM) மற்றும் மகாராஷ்டிரா காந்தி ஸ்மாரக் நிதி (புனே) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இம்மாநாட்டுடன் இணைந்ததாக, “அனைத்திந்திய மகாத்மா காந்தி இலக்கிய மாநாடு” (All India Mahatma Gandhi Literature Conference) மற்றும் “சர்வதேச உலகளாவிய காந்திய அமைதி மாநாடு” (International Global Gandhi Peace Conference) ஆகிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன உறவுகள், அமைதி ஆய்வுகள், சர்வதேச அரசியல் மற்றும் மெய்யியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கைக்கான முன்னணி ஆய்வாளரான கலாநிதி முபிஸால் அபூபக்கர், இம்மாநாட்டில் சிறப்பு வளவாளராகப் பங்கேற்கின்றார்.

இதன்போது, மகாத்மா காந்தியின் அமைதித் தத்துவம், பெண்களின் முன்னேற்றம், இலங்கை அரசியலில் காந்திய சிந்தனைகளின் தாக்கம், அகிம்சை, மனிதநேயம் மற்றும் உலகச் சமாதானம் போன்ற முக்கிய தலைப்புகளில் அவர் தனது ஆய்வுக் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

இலங்கையின் உயர்கல்வித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வியாளராகவும், மெய்யியல் மற்றும் சமூக இணக்கப்பாட்டு ஆய்வாளராகவும் திகழும் கலாநிதி முபிஸால் அபூபக்கரின் பங்களிப்பானது, இலங்கை – இந்தியக் கல்வி, ஆய்வு மற்றும் அமைதிச் சிந்தனைப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்