இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

Date:

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் ‘நேஷனல் கோ-ஆப்பரேட்டிவ் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் (NCEL)    மற்றும் இலங்கையின் ‘நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டமைப்பு’ ( (COOPFED)      ஆகியவை கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (06)  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (ஆழுரு) கையெழுத்திட்டன.

இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு வசந்த சமரசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோரின் முன்னிலையில்,  (NCEL )  -இன் நிர்வாக இயக்குநர் திரு. அனுபம் கௌசிக் மற்றும் ஊழுழுPகுநுனு -இன் தலைவர் டாக்டர் சாந்த ஜெயரத்ன ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இவ்விரு நிறுவனங்களின் கூட்டுறவு வலைப்பின்னல்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒரு கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. இந்தக் கூட்டாண்மையின் கீழ்,  NCEL )   -இன் கூட்டுறவு வலைப்பின்னல்கள் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும்; இது பொருட்களின் பற்றாக்குறையைக் குறைக்கவும், மலிவு விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும்.

அத்துடன் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களை விநியோகிப்பதுடன் மட்டுமல்லாமல், சந்தை நிலவரத் தகவல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கிடங்கு மற்றும் தளவாட வசதிகள் (டழபளைவiஉந)  விநியோகச் சங்கிலி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் முன்னிறுத்துகிறது. மேலும், இது இரு நாடுகளின் கூட்டுறவுத் துறைகளுக்கு இடையிலான நிறுவன ரீதியான தொடர்புகளையும் வலுப்படுத்தும்.

கூட்டுறவுத் துறையிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ்  NCEL   நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் உச்ச அமைப்பான  (logistice)   -உடனான இதன் கூட்டாண்மையானது, இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும்.

உணவுப் பாதுகாப்பு, வலுவான விநியோகச் சங்கிலிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கான நன்மைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்தியா-இலங்கை இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாவிதன்வெளியில் அதிகரிக்கும் காட்டு யானை அச்சுறுத்தல்: சிறுவன் மீது தாக்குதல்!

அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி மற்றும் அதனை அண்டிய நற்பிட்டிமுனை, கிட்டங்கி ஆகிய...

அனோஜன் விவகாரத்தை ஞானசாரருடன் இணைக்க முற்படும் நாமல்

சிறைக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

மஹிந்த மனைவி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்