விபத்தில் ஆசிரியை பலி

Date:

ஆசிரியர் தினத்தை கொண்டாடிவிட்டு பாடசாலையில் இருந்து அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் அதிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கனரக வாகனத்தை விட்டுவிட்டு சாரதி தப்பி ஓடிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (6) மட்டக்களப்பு திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன் இடம் பெற்றுள்ளதுடன் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் சூரியா வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய வலையிறவு த.க.பாடசாலையில் கல்வி கற்பித்து வரும் கமலநாதன் மதிவதனி என்ற ஆசிரியையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் குறித்த ஆசிரியை சம்பவ தினமான இன்று ஆசிரியர் தினத்தையிட்டு அதனை கொண்டாடிவிட்டு பாடசாலை முடிவடைந்த பகல் 1.30 மணிக்கு அந்த பாடசாலை அதிபரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்துக் கொண்டார்.

இந்த நிலையில் திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த கனரக வாகனம் மோதியதையடுத்து இருவரும் கீழ் வீழ்ந்ததையடுத்து ஆசிரியை மீது கனரக வாகனம் ஏறியத்தில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் அதிபர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்டதுடன் கனரக வாகன சாரதி வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியதையடுத்து அங்கு பொதுமக்கள் ஒன்று திரண்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து பொலிசார் கனரக வாகனத்தை மீட்டெடுத்துக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கலாநிதி முபிஸால் அபூபக்கர் இந்தியா பயணம்: சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகப் பங்கேற்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச காந்திய அமைதி மாநாட்டில் வளவாளராகக் (Resource Person)...

இந்தியா (NCEL) ) மற்றும் இலங்கை ( (COOPFED) ) இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றில்...

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்