காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து கடலில் மீன்பிடிக்க வீசப்பட்டிருந்த 5 சுருக்கு வலைகளை கடற்படையினர் மீட்பு

Date:

காத்தான்குடி பாலமுனை கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான    5   சுருக்கு வலைகளை கடலில் வைத்து கடற்படையினர் மீட்டு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் நேற்று வியாழக்கிழமை (01) ஒப்படைத்துள்ளனர்.

கல்லடி கடற்படை புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையினர் சம்பவ தினமான புதன்கிழமை இரவு கடலில் காத்தான்குடி பாலமுனை  மீன்பிடிக்க வீசப்பட்டு இருந்த சட்டவிரோத சுருக்கு வலையை தேடி பிடித்து; 50 இலட்சம் ரூபா பெறுமதியான உரிமை கோராத 5 மீன்பிடி சுருக்கு வலைகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை மட்டக்களப்பு மாவட்ட  கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் கடற்படையின் ஓப்படைத்தனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பாலமுனை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுதாவளை, களுவங்கேணி உட்பட பல பிரதேசங்களில் சுமார் 50 க்கு மேற்பட்ட சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக மீனவர் சங்கங்கள், மற்றும் மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்