வைத்தியர் சுகுணன் மீது அவதூறு: அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

Date:

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பில் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 6 பேரையும் இந்த வழக்கு முடியும் வரை வைத்தியர் பற்றி முகநூல் சமூக வலைத்தளங்கள் பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய முறைப்படி உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் அவரது குடும்பம் தொடர்பாக அவதூறாக சமூக வலைத்தளங்கள் முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவிடப்பட்டது.

இந்த அவதூறு தொடர்பாக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வைத்தியர் கு.சுகுணன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தர்ஷினி மன்னிலையில் திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகி சமர்பணம் முன்வைத்தனர். இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரையும் வைத்தியர் சுகுணன் பற்றி அவரது குடும்பம் பற்றியோ முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வழக்கு முடியும் வரை பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் 6 பேரும் சமூகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளையிட்டார்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img
Previous article
Next article
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 6 பேரையும் இந்த வழக்கு முடியும் வரை வைத்தியர் பற்றி முகநூல் சமூக வலைத்தளங்கள் பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார். கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் நியமிக்கப்பட்டவர்கள் கிஜா உடை அணிவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது இதன் போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் அவரது குடும்பம் தொடர்பாக அவதூறாக சமூக வலைத்தளங்கள் முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவிடப்பட்டது இந்த அவதூறு தொடர்பாக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வைத்தியர் கு.சுகுணன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தார். இந்த குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகிய சமர்பணம் முன்வைத்தனர் இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார். குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (28) திறந்த நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அருச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேரையும் வைத்தியர் சுகுணன் பற்றி அவரது குடும்பம் பற்றியோ முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வழக்கு முடியும் வரை பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் 6 பேரும் சமூகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டு கட்டளையிட்டார்.

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்