ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

Date:

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்ட அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் ரக்வான, கண்டகும்புரவைச் சேர்ந்த 39 வயதான இரு குழந்தைகளின் தாயான நவலகே நாடிகா ஜெயமாலி விக்ரமரத்ன ஆவார்.

இக்கொலைச் சம்பவம் குறித்து விசாரிக்கும் பொலிஸார், இரத்னபுரியில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறை துணை முகாமில் பணியாற்றும் சந்தேகநபர், 25-ஆம் திகதி தனது பணி முடிந்ததும் குடிபோதையில் வீடு திரும்பி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

கோப்பி அறுவடைக்கு பயன்படுத்தப்படும் உறுதியான மரத்தாலான ‘கோப்பி கம்பு’ ஒன்றைக் கொண்டு அப்பெண்ணின் தலை மற்றும் உடலில் சந்தேகநபர் கடுமையாகத் தாக்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்; தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் கம்பு பின்னர் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட பொலிஸார், சந்தேகநபர் அன்று தனது மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, இரவு உணவிற்காக உணவகத்திலிருந்து ‘ஃப்ரைட் ரைஸ்’ வாங்கி வந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு, அதிகாலை 2 மணியளவில் தனது மனைவி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குச் சென்ற சந்தேகநபர், அவர் படுக்கையில் இறந்து கிடப்பதைக் கண்டார். சந்தேகநபர் அண்டை வீட்டாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் ரக்வான பொலிஸாருக்கும் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்தனர். இதன் விளைவாக, அப்பெண்ணின் மரணம் தொடர்பாகக் கணவர் கைது செய்யப்பட்டார்.

தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது தான் மனைவியை தள்ளியபோது அவரது தலை கட்டிலின் சட்டத்தின் ஒரு பகுதியில் மோதியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறினார்.

பெல்மடுல்ல நீதவான் தாரிந்து சமீர டி சில்வா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடலைக் கஹவத்த ஆதார மருத்துவமனைக்கு மாற்றவும், நீதிமன்ற மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனை நடத்தவும், முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (27) பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்