மட்டக்களப்பில் பிரதேசம் ஒன்றில் 6 வயது சிறுமி ஒருவரை அவரது அப்பப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுமியின் 66 வயதுடைய அப்பப்பாவை எதிர்வரும் 9ம் திகதிவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது
பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் குழந்தை பெற்று 3 மாதமாகிய நிலையில் குழந்தையை கிளினிக்க்காக வைத்தியசாலைக்கு சம்பவ தினமான 24 ம் திகதி கொண்டு செல்வதற்காக 6 வயது சிறுமியை கணவனின் தாயாரை அழைத்து அவரின் பாதுகாபபில் விட்டுவிட்டு கணவருடன் குழந்தையை எடுத்து கொண்டு வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் கணவரின் தாயாரான மாமியார் இல்லாத நிலையில் சிறுமியை அவரது அப்பப்பா பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை கண்டு அதிர்சியடைந்ததுடன் அவரை அடித்து தாக்கியதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்;கு 25ம் திகதி வெள்ளிக்கிழமை முறையிட்டதையடுத்து அவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவை கைது செய்ததுடன் சிறமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்
இதில் கைது செய்யப்பட்வரை நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை (26) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் கைவக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இது தொடர்பான மேலதிக விசாணைகளை குறித்த பிரதேசத்தைச் சேர்ந்;த பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




