நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

Date:

திரைப்​படத்​துக்​காகப் பெற்ற ரூ.40 லட்​சம் முன் பணத்​தைத் திருப்பி கொடுக்​காதது தொடர்​பான வழக்​கில், நடிகர் ராஜ்கிரணுக்கு முன்​ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மீஞ்​சூரில் தயாரிப்பு நிறு​வனம் நடத்தி வரும் சரவணன் என்​பவர், கடந்த 2022-ம் ஆண்டு திரைப்​படத்​துக்​காக நடிகர் ராஜ் கிரணுக்கு ரூ.50 லட்​சம் முன்​பணம் அளித்​துள்​ளார். பட தயாரிப்புப் பணி​கள் தொடங்​காத​தால், பணத்​தைத் திருப்​பிக் கொடுக்​கும்​படி, ராஜ்கிரணிடம் சரவணன் கேட்​டுள்​ளார்.

தயாரிப்​பாளர் சங்​கத்​தில் நடந்த பேச்​சு​வார்த்​தை​யில் ரூ.10 லட்சத்தை 2025-ம் ஆண்டு சரவணனுக்​குத் திருப்​பிக் கொடுத்த நிலையில், ரூ.40 லட்​சத்தை மோசடி செய்​து​விட்​ட​தாக, மீஞ்​சூர் போலீசில் கடந்த 2025-ம் ஆண்டு சரவணன் புகார் அளித்​தார். பொன்​னேரி மாஜிஸ்​திரேட் நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில் கடந்த ஆக.28-ம் தேதி ராஜ்கிரண் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்​கில் முன் ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண், சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்துள்​ளார்.

அந்த மனு​வில், “படம் தயாரிப்பு தொடர்​பாக 2022-ம் ஆண்​டில் ஒப்பந்​தம் நடந்த நிலை​யில், 4 ஆண்​டு​களுக்​குப் பிறகு வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உரிமை​யியல் வழக்​கான இந்த வழக்குக்கு குற்​ற​வியல் சாயம் பூசப்​பட்​டுள்​ளது.

தமிழக திரைப்பட ரசிகர்களுக்​குப் பரிச்​சய​மான நடிக​ரான தான், எங்​கும் தப்பி விட மாட்டேன்” எனக் கூறி​யுள்​ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், ராஜ்கிரணுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தர​விட்​டார். 15 நாட்​களுக்​குச் சம்​பந்​தப்​பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும் என்று நீதிபதி நிபந்​தனை விதித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை அகற்றல்: ‘பொலிசார் மிரட்டியதும் தலைவரை தொடர்பு கொண்டேன்’… யாழ் மாநகர முதல்வர் விளக்கம்!

நல்லூரில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் யாழ்.மாநகரசபைக்கோ, தமிழ் அரசு...

தியாகி திலீபன் சிலை அகற்றல்: வடக்கு, கிழக்கில் நாளை எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்...

திலீபன் சிலை அகற்றல்: தமிழரசு கட்சியே பொறுப்பு- கஜேந்திரன் காட்டம்!

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனி சிலையை அகற்றிய இந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்