மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

Date:

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா தலைவர்கள் சந்திப்பு

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின்...

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார்

மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்