மட்டக்களப்பு மாவட்டத்திலே மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையானது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் தெரிவித்தார்.
ஓந்தாச்சிமடம் ஆயர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகைபயில்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையிலே பெருமளவான நிதிகள் தேங்கி கிடக்கின்றன அந்த நிதிகளை செலவு செய்து மக்களுகான சிறப்பான சேவையினை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்டதிட்டங்களை சரியான முறையிலே முன்னெடுத்து செல்கின்ற ஒரு சபையாக இச்சபை காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி கட்சி பேதங்களை கடந்து மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் எனபதினிலே தவிசாளர் மிகவும் கவனமாக உள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேஇருக்கும் பன்னிரெண்டு சபைகளினால் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களை பார்க்கும் போது இவர் தனது சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலே தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார். கழிவகற்றல் முகாமைத் திட்டமாக இருக்கட்டும் அல்லது சமூகநலன் சார்ந்த வேலைத்திட்டமாக இருக்கட்டும் தனக்கு கிடைக்கும் நிதிகளை சரியான முறையிலே பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் இதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் எங்களது உறுப்பினர்களும் சபையில் இருக்கின்றனர் அவர்களினது தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே பல வைத்தியசாலைகள் பலதரப்பட்ட தேவைகளுடன் இறங்கி வருகின்றது. அத் தேவைகளும் எதிர்வரும் காலங்களில் பூர்த்தி செய்யப்படும். உண்மையில் எமது ஆளுநர் எமது கிழக்கு மாகாண சபைக்கு கிடைத்த வரம் காரணம் எமது ஆளுநர் அவர்கள் இரண்டு பாசைகளையும் சரளமாக பேசக்கூடிய வகையில் இருப்பதாகும். இதனால் எமது மக்கள் அனைத்து விடயங்களையும் ஆளுநரிடம் தெரிவித்து அதனை பூர்த்தி செய் கூடியதாகவுள்ளது. என அவர் இதன் போது தெரிவித்தார்




