விஜய்யை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகை

Date:

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கையெழுத்திட்டார். ஆனால் தேர்தல் வாக்குறுதிக்கு எதிராக இது அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது வாக்குறுதியில் 200 யூனிட் இலவசம் எனச் சொல்லிவிட்டு பின்பு 500 யூனிட்டிற்கு குறைவான மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அது செல்லும் என சில கண்டிஷன் போடப்பட்டது எதிர்வினையைச் சந்தித்தது. மேலும் அதிக நேர மின் வெட்டு, மின் கட்டண உயர்வு என அடுத்தடுத்து மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் வெடித்தது. இதில் மின் கட்டண உயர்வு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே முதல்வரின் முதல் கையெழுத்து தொடர்பாக சின்னத்திரை நடிகை வைஷாலி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “எங்க தளபதியோட முதல் கையெழுத்தே 200 யூனிட் ஃப்ரீ… இப்ப நீங்க என்ன பேசப்போறீங்க” என உற்சாகம் பொங்க முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பேசியிருந்தார். ஆனால் அது தொடர்பாக தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் வெளியிட்ட வீடியோவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே சாமானிய மக்களின் கரண்ட் பில் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. எனக்கும் இதே நிலைமை தான். கரண்ட் பில் விஷயத்தில் தவெக சொன்னது போல் செயல்படவில்லை. இப்படியே போனால் மக்களுடைய வாழ்வாதாரம் ரொம்பவே கஷ்டமாகிவிடும். நீங்கள் சொன்ன 200 யூனிட் ஃப்ரீ என்ற திட்டத்தை எடுத்துவிட்டு இதற்கு முன்பு கரண்ட் பில் எப்படி வந்ததோ அதே மாதிரி கொடுத்தாலே மக்களுக்கு உதவியாக இருக்கும். இப்படியே சென்றால் கவர்மெண்ட் மேல் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும்” என்றுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்