மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

Date:

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறியதால் மின்சாரசபைக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாயை மின்சாரசபைகு செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் 28ஆம் திகதி உத்தரவிட்டது.

21ஆம் திகதி பிற்பகலில், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிய கம்புருபிட்டிய, பரகம்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றுவதற்காக, மாத்தறை மாவட்டம் கம்புருபிட்டியவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரசபை மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டியிருந்தது. கம்புருபிட்டிய பொலிஸாரால், அந்த நபரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்குக் கொண்டுவரப்பட்டனர், அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அதன் பின்னர் அந்த நபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

24-ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக மின்சார சபையால் 201,059.90  ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேற்கூறிய தொகையை மின்சாரசபைகுச் செலுத்துமாறும், நவம்பர் 3-ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்