நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

Date:

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களின் பெயர்கள் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா, சந்தேக நபர்களை ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (27) உத்தரவிட்டார்.

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 சிறை உத்தியோகத்தர்களும், 22 கைதிகளும் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றவியல் புலனாய்வுத் துறை, இச்சம்பவம் தொடர்பாக சமர்ப்பித்த மேலதிக அறிக்கையில், சுபுன் மதுசங்க என்ற ஹீனதியான சுபுன், அஷான் பெர்னாண்டோ என்ற கலு மல்லி, சமீரா சம்பத் என்ற பாபா மற்றும் ஷேன் திலன் சில்வா ஆகிய நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளது.

அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில்-

சிறையில் உள்ள கைதிகள் இந்த சந்தேக நபர்களை அடையாளம் காணும் திறன் கொண்டவர்கள். சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். விசேஷ அதிரடிப்படையினர் சம்பவ தினத்தன்று 301 துப்பாக்கிகளைக் கொண்டு வந்தனர்.

சிறை உத்தியோகத்தர்களிடம் 70 துப்பாக்கிகள் இருந்தன.

அவர்களின் அறிவியல் சான்றுகள் குறித்து நிபுணர் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

260 சிறை உத்தியோகத்தர்கள், 849 கைதிகள், 205 விசேஷ அதிரடிப்படையினர், 11 பொலிஸ் உத்தியேகத்தர்கள் மற்றும் 70 பொதுமக்கள் உட்பட 1,395 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

நேற்று சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா, நீதிமன்றம் மாலை 4:00 மணிக்கு மீண்டும் கூடியது.

அப்போதைய நிலையில், மக்கள் போராட்டக் குடிமக்கள் அமைப்பு, ஜனாதிபதி சட்ட ஆலோசகர் மைத்ரி குணரத்ன மூலம் வழக்கில் இணைவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியது.

நீதிமன்றk் அதற்கு அனுமதி வழங்கிய நிலையில், ஜனாதிபதி சட்ட ஆலோசகர் மைத்ரி குணரத்ன தனது சமர்ப்பிப்புகளில் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“இந்தச் சம்பவத்தில், சிறைக்குள் 32 பேர் உயிரிழந்தனர். இது மிகவும் கடுமையான குற்றமாகும். ஜூலை 5ஆம் திகதி நிகழ்ந்த இந்தச் சம்பவம், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு சாதாரண நிகழ்வாகும். அவர்களில் மூவர் உயிரிழந்தனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அன்றைய தினம் சிறையிலிருந்து ஆயுதங்கள் கூட அகற்றப்பட்டன. இருப்பினும், அன்றைய தினம் கைதிகள் கூண்டுகளில் அடைக்கப்படாமல் சுதந்திரமாக விடப்பட்டனர்.

அன்று சிறையைப் பல உத்தியோகத்தர்கள் காவலில் வைத்திருந்தனர்.

கைகளில் துப்பாக்கிகளுடன். மறுநாள் காலை ஆறு மணி வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், எந்தப் பிரச்சனையும் இல்லாத ஓர் இடத்திற்கு, சிறை தலைமையகத்திலிருந்து 10 துப்பாக்கிகளுடன் சாதாரண உடையில் 89 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொண்டுவரப்பட்டனர். அன்றைய தினம், ஒரு மோதல் வெடித்ததில் 10 உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர், 19 கைதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

பெரும்பாலான கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் கொல்லப்பட்டனர். இன்று, சுமார் 300 துப்பாக்கிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான மரணங்கள் அந்த ஆயுதங்களால் ஏற்பட்டன. இறந்த அதிகாரிகளுக்கு அரசாங்கம் பெரும் தொகையை இழப்பீடாக வழங்கி வருகிறது. கைதிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் போராட்டக் குடிமக்கள் அமைப்பின் சார்பாகவும், இறந்த கைதியான முகமது நிஜாம் சார்பாகவும் நான் இன்று ஆஜராகிறேன்.

அவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்தக் குடும்பம் மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளது. இளைய குழந்தைக்கு இன்னும் இரண்டு மாதங்களே ஆகிறது. பிரிவு 54-இன் கீழ் தடயவியல் அறிக்கைக்காகக் காத்திருந்தபோது இந்த நபர் இறந்துவிட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். எனவே, கைதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.”

இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுத் துறையினர்,

“ஜூலை 14-ஆம் திகதி நாங்கள் கைப்பற்றிய அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை அரசாங்க ஆய்வாளரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறை ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி வருகிறது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஒவ்வொரு வழக்கின் அடிப்படையிலும் சேகரிக்கப்படும்.” என்றனர்.

நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா, இதுவரை 28 பேர் தனது நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதாகவும், நீதிமன்றம் அனைவருக்கும் சமமாக நீதி வழங்கும் என்றும் தெரிவித்தார்.

கைதிகளின் மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாக நீர்கொழும்பு சிறைக் கண்காணிப்பாளரை நாளை, (இன்று) ஜூலை 28 ஆம் திகதி, நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சாட்சியத்தை அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர்கள் 1, 2, 3, 4 ஆகியோருக்குக் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ உள்ளனரா என்று கேட்டறிந்த பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடையாள அணிவகுப்பிற்காகத் தனது அலுவலகத்திற்கு அழைத்து வருமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அந்த நான்கு சந்தேக நபர்களும் ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்