மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

Date:

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கடலில் மாயமானதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) கவலை வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட இந்த இரண்டு படகுகளிலும் பெரும்பாலும் ரோஹிங்கியா அகதிகள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 250 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகுடன் புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மேலும் சுமார் 280 பயணிகளுடன் சென்ற மற்றொரு படகு ஜூலை 8 ஆம் தேதி மியான்மரின் அயேயர்வாடி கடற்கரைக்கு அருகே மூழ்கியிருக்கலாம் எனவும் ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ரோஹிங்கியா மக்கள் மியான்மரின் ரகைன் மாநிலத்தைச் சேர்ந்த குடியுரிமையற்ற முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர்கள். பல தசாப்தங்களாக அவர்கள் அரசின் அடக்குமுறை, வன்முறை மற்றும் இனஅழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் முகாம்களில் வசித்து வருவதுடன், சுமார் 6.3 இலட்சம் பேர் இன்னும் ரகைன் மாநிலத்திலேயே உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது ஒரு இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகைன் மாநிலத்தில் இராணுவ ஆட்சிக்கும் அரகான் இராணுவ கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையிலான மோதல் காரணமாக மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளது.

பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி பல ரோஹிங்கியா அகதிகள் பழுதடைந்த சிறிய படகுகளில் கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போனவர்களில் சிலர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களில் இருந்து மியான்மருக்குத் திரும்பி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் பருவத்தில் நடந்துள்ளன. அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு படகுகள் கவிழ்ந்ததாக வெளியான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த ஆண்டில் மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் சுமார் 300 பேர் உயிரிழந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ பதிவாகியுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் மனிதக் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐ.நா. அமைப்புகள் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்