மருதமுனையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Date:

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கதிர்காமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தொன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராகவும், தற்போது பாண்டியிருப்பில் திருமண உறவின் காரணமாக வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்