இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

Date:

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் முதல் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இன்று (13) கண்டானையில் அமைந்துள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அருட்தந்தை கல்யாணபிரியா ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன், இலங்கையைச் சேர்ந்த ஒரு குருவும் நேபாளத்தைச் சேர்ந்த மூன்று குருமார்களும் உட்பட மொத்தம் நான்கு பேர் ஆயர்களாக அர்ச்சிக்கப்பட்டனர்.

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு வெளிநாட்டு ஆயர்களின் பங்கேற்புடன் இந்த திருநிலைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது. இது நிகழ்வின் சர்வதேச முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தியது.

வெளிநாட்டு மதகுருமார்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் உள்ளூர் விசுவாசிகள் என பெருமளவானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின் ஆயர் திருநிலைப்படுத்தல் விழா இலங்கையில் நடைபெற்றது இதுவே முதல் முறை என திருச்சபை நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன், இது நாட்டின் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு முக்கியமான வரலாற்று மைல்கல்லாக அமைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் அச்சுவேலி வைத்தியசாலையில் தூய்மைப் பணி

அரசாங்கத்தின் “கிளீன் ஸ்ரீலங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்...

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்