திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முதல்வர் விஜய்

Date:

திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல்வர் விஜய், அந்த தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய். இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பதற்கு முன்பாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசனிடம் வழங்கினார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்