மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு

Date:

மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) தேவாயத்தின் முன்னாலும். காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்திலில் கண்ணீர் மல்க மலர் வைத்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் கவனயீர்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

2019ம் ஏப்ரல் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல இடங்களில் சஹ்ரான் காசீம் தலைமையிலான குழுவினரால் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மட்டக்களப்பில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் இரு கண்களையும் இழந்ததுடன் 2 பேர் இடுப்புக்கு கீழ் இயங்காது நிலையில் படுக்கையில் இருந்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பித்தது. இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினார்.

தற்கொலை குண்டு தாக்குதலில் தனது சிறுவனான மகன் உட்பட ஒரே குடும்பத்தில் 3 பேர்; உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் கண்பார்வை இரண்டையும் முற்றாக இழந்து பாதிக்கப்பட்டுள்ள உறவினர் உயிர்நீத்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி மலர் வைத்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்

மட்டு காந்திபூங்காவில் நினைவு தூபியில்

இதேவேளை மட்டு காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்ப ட்டிருந்த நினைவு தூபியில் மட்டு மாநகரசபை மேஸர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நீனைவேந்தல் இடம்பெற்றது.

இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் வைத்து மெழுகுவர்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில்

இதனை தொடரந்து கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் புகாரி ஏற்பாட்டில் கிறிஸ்தவ வணபிதாக்கள் அருட்சகோதரிகள், மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வைத்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கு 7 வரும் கடந்தும் எங்களுக்கான நீதி எங்கே என கோரி கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

-கனகராஜா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்