அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு கடுமையான மிரட்டல் பதிவில், மறுநாள் ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சுறுத்தினார்.
சனிக்கிழமை அவர் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், “ஈரானில் செவ்வாய்க்கிழமை மின் உற்பத்தி நிலைய தினமாகவும், பால தினமாகவும், இரண்டும் ஒன்றாக இணைந்த நாளாக இருக்கும். இதைப்போல் வேறு எதுவும் இருக்காது!!!” என்று கூறினார்.
“அந்த ஜலசந்தியைத் திறங்கள், பைத்தியக்காரர்களே, இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ்வீர்கள் – பாருங்கள்!” என்று எழுதிய அதிபர், “அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்றும் சேர்த்திருந்தார்.
ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தாலும், தெஹ்ரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டும் நம்பிக்கையில், ஈரானின் மின் கட்டமைப்பு மீதான அத்தகைய தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை அவர் ஒத்திவைத்துள்ளார்.




