விவசாயி மனைவி கணக்கில் ரூ.10 கோடி திடீரென வரவு வைத்த வங்கி – ஒரு ரூபாய் கூட எடுக்காததால் குவியும் பாராட்டு

Date:

உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார்.

அஷ்டமி விழாவை முன்​னிட்டு வங்​கிக்கு விடுமுறை என்பதால், அரு​கில் உள்ள ஏடிஎம் மையத்​துக்கு ரீடா சென்று தனது வங்​கிக் கணக்​கில் எவ்​வளவு பணம் உள்​ளது என்று பார்த்​தார். அப்​போது, ரூ.9 கோடியே 99 லட்​சத்து 49,588 இருந்​ததைப் பார்த்து ரீடா மலைத்​துப் போனார். ஏடிஎம்.மில் காட்டிய தொகையை மொபைல் போனில் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளி​யிட்​டார்.

அது வைரலாகி​ விட்​டது. பின்​னர், தனது வங்​கிக் கணக்​கில் உள்ள பணத்தை யாரும் எடுக்கக் கூடாது என்று குடும்ப உறுப்​பினர்​கள் அனை​வரிட​மும் ரீடா திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார். அதை அறிந்து அக்​கம் பக்​கத்​தினர் ரீடா​வின் நேர்​மை​யைப் பாராட்டினர்.

தகவல் அறிந்த கரீம்​கஞ்ச் பேங்க் ஆப் இண்​டியா கிளை மேலா​ளர் ரிஷி​காந்த் பாண்டே கூறும்​போது, “பணப் பரி​மாற்​றம் நடைபெறும்​ போதோ அல்​லது தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாகவோ தவறாக பணம் ரீடா வங்​கிக் கணக்​கில் பணம் வரவு வைக்​கப்​பட்​டிருக்​கலாம். வங்​கிக் கிளை திறந்​தவுடன் அது சரி செய்​யப்​படும்” என்​றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்