கொளத்தூரில் மு.க.ஸ்டாலின், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்

Date:

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று (மார்ச் 30) வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்தத் தொகுதியில் தவெக சார்பில் விஜய், திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சார்பில் ம.திலகபாமா, நாதகவின் வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தவிர்த்து, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2011-ம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்