கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு

Date:

கொக்கடிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இரண்டு மாத்தின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இன்பமலர்தேவி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி 17 ம் திகதி மனைவியின் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 20ம் திகதி நீதிமன்ற ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

இந்த நிலையில் படுகாயமடைந்த பெண் 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பிய பின்னர் சம்பவ தினமான இன்று காலையில் வீட்டில் உயிரிழந்துள்ளதையடுத்து அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘20 விசில் வந்தாலும் மட்டன் வேகவில்லை’ – குக்கருடன் போலீஸ் நிலையம் வந்தவரால் பரபரப்பு!

குக்கரில் 20 விசில் விட்டாலும் மட்டன் வேகவில்லை என்று குக்கருடன் ஒருவர்...

ஈரான் தூதரை வெளியேற்றுகிறது லெபனான்

ஈரானிய தூதருக்கான அங்கீகாரத்தை லெபனான் திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், அவரை விரும்பத்தகாத நபர்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் உச்சதலைவர் அனுமதி

ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்