அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

Date:

தமிழ் அரசியல்வாதிகள் பிரதேச இன, இழிவுபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுக்களை நிறுத்துமாறு கோரி கடுமையான கண்டனத்தை தெரிவித்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (23) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பாராளுமன்றத்தில் மலையக மக்களை நாய்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய அந்த மக்களை இழுவுபடுத்தியதுடன் தொடர்ந்து வெறுப்பு தூண்டும் பேச்;சுக்களை பேசிவருகின்றனர் இதனை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு இன்று திங்கட்கிழமை (23) காந்தி பூங்காவில் ஆர்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டனர்.

இதன்போது தமிழ் அரசியல்வாதிகளே இன வேறுபர்டுகள் பார்க்காதே, அவதூறு பேசாதே, அரசியல்வாதிகளே இன இழிவுபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுக்களை நிறுத்து. இன மதம் பாக்காதே, நாடாளுமன்னறத்தில் மக்கள் அபிவிருத்தி தொடர்பாக பேசு, மக்களின் பிரச்சனையை பேசு, போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்;தில் ஈடுபட்ட ஆர்பாட் காரர்கள் கண்டன அறிக்கை வாசித்த பின்னர் அங்கிருந்து ஆர்பாட்டகார்கள் விலகி சென்றனர்.

‘தமிழ் அரசியல்வாதிகளே! உங்கள் பிரதேச, இன இழிபடுத்தல் வெறுப்பு குற்ற பேச்சுகளை உடன் நிறுத்துங்கள்.’ நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேணடி;ய பொறுப்பில் உளள் அரசியல் பிரதிநிதிகள,; சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துகக்ள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கணட்னத்தையும் வலியுறுத்துகிறோம்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும ;ஏற்றுக்கொள்ள முடியாதது. இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிகக்கையையும் நல்லிணக்கத்தையும் சரீ;குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் ,இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன. ,இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.

மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாகக் வேணடியவர்கள். ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூணடும் கருத்துகக்ளை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின ;வெளிப்பாடாகும். இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.

மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துகக் ளை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேணடு;ம் என்பதை வலியுறுத்துகிறோம். மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின ; அடிப்படையாக அமைய வேணடு;ம்.

இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் ,னவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பானi;ம ஆழப்படுத்தப்படும் அபாயம் உளள்து. ,தனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மன அழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேணடு;ம். இன, பிரதேச, மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேணடு;ம் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

அத்துடன், இனம், பிரதேசம், மொழி, சாதியம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும்; கூடிய தெளிவான மற்றும் வலுவான பாராளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேணடு;ம்.

மேலும், அரசியல் கடச்pகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உளக்டட்மைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாககு;ம் போது, இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேணடும். இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும்.

‘ நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அதனை சீர்குலைக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் எங்களது உறுதியான எதிர்ப்பு தொடரும். ‘ என குறிப்பிடப்பட்ட அறிக்கை ஒன்றை மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஆர்பாட்காரர்கள் கையளித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவும், ஈரானும் சில விடயங்களில் இணக்கத்தை எட்டியுள்ளன: ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேசியுள்ளதாகவும், இரு தரப்பும் சில விடயங்களில்...

ஈரானுடன் பேச்சு நடக்கிறது; எரிசக்தி கட்டமைப்பு தாக்குதல்கள் ஒத்திவைக்கப்படுகிறது: ட்ரம்ப்

ஈரானின் மின்சார வலையமைப்பைத் தாக்கும் முடிவிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று...

இலங்கையின் அழைப்பிலேயே போர்க்கப்பல்கள் வந்தன: ஈரான் தூதர்

இலங்கைக்கான ஈரான் தூதர் அலிரெஸா டெல்கோஷ், கப்பல்களில் ஒன்று தாக்கப்படுவதற்கு முன்னர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்