சினோபெக் , லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாவாகும்.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு நிகராகத் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

நேற்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 79 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 443 ரூபாவாகவும் மாற்றமடைந்துள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 455 ரூபாவாகவும், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 398 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும், லங்கா மண்ணெண்ணெய் விலையை 60 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 255 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் மினி எரிபொருள் களஞ்சியம் வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான...

மின்சாரம், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்: பொதுமக்களை கோருகிறது அரசு!

தொடர்ந்து நடைபெற்று வரும் மத்திய கிழக்கு போரினால் உலகளாவிய எண்ணெய் சந்தைகளில்...

யாழ் இந்து விளையாட்டு போட்டியில் காயமடைந்த 4 மாணவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் தீக்காயமடைந்த 4 மாணவர்கள் யாழ்ப்பாணம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்