திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்ட விஜய்- த்ரிஷா

Date:

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய் – த்ரிஷா இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர்.

சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். நடிகையொருவருடன் விஜய்க்கு உள்ள கள்ளக்காதல் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகை த்ரிஷா என சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டது.அது குறித்து சமூக வலைதளத்தில் கருத்துகளும் விவாதங்களும் அனல் பறந்தன.

இந்தச் சூழலில், விஜய் – த்ரிஷா இருவரும் பொது நிகழ்வு ஒன்றில் சேர்ந்து கலந்துகொண்டது கவனம் ஈர்த்துள்ளது.

விஜய், த்ரிஷா இருவரும் ஒன்றாக மேடையில் அருகருகே நின்று மணமக்களை வாழ்த்திய வீடியோ பதிவை பி.ஆர்.ஓ நிகில் முருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை முன்வைத்தும் சமூக வலைதளங்களில் பேச்சுகளும் கருத்துகளும் பெருகி வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் முதல் Orthodox Bishop பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கை கிறிஸ்தவ வரலாற்றில் புதிய அத்தியாயமாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரிய கிறிஸ்தவ திருச்சபையின்...

சுரேஷ் சலே விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் – முன்னாள் எம்.பிக்கள் வலியுறுத்தல்

சுரேஷ் சலே விவகாரம்: சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் எம்.பிக்கள்...

என்னை நோக்கிய குற்றச்சாட்டுகள் தவறான கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன – நாமல்

இன்றைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களின் பணம் மட்டுமன்றி, தோல்விகளுக்கான பொறுப்புகளும் குற்றச்சாட்டுகளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்