பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நீக்குவதோடு புதிதாக வரவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைபை நீக்கக் கோரி பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தாயக செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டமானது யாழ் பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமாகி A9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு ஆளுநர் தலைமை அலுவலகத்தை சென்று நிறைவடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனுரா அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்களை முன்வைத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் காணி அபகரிப்புக்களை நிறுத்துதல் போன்ற கோஷங்களை முன்வைத்தனர்.
போராட்டத்தின் இறுதியில் ஐநா சபைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஊடகங்களுக்கு வாசிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பிரதேச சபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



