கனேடிய தமிழர் பேரவைக்கு (CTC)ஒரு திறந்த மடல்!

Date:

1-தருமர்-

கனேடிய தமிழ் காங்கிரஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முன்னணி அமைப்பாகவே தோற்றம் பெற்றது மாத்திரமல்ல இந்த அமைப்பு வன்னியில் இருந்தே இயக்கப்பட்டது. அத்துடன் கனடாவில் இருக்கின்ற அரசாங்கங்களுக்கு அழுத்தக் குழுவாகவும் CTC அவ் வேளையில் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

• அன்று புலிகள் இன்று சுமந்திரன் அணியினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தவுடன் (2009 மே மாதத்திற்குப் பிறகு) தங்களை சுயமாக இயங்கும் அமைப்பாகக் காட்டிக் கொண்டது.
வன்னித் தலைமையின் கட்டுப்பாட்டில் இயங்கிய CTC போர் மௌனிக்கப்பட்டபின், சுயமாக இயங்கும் அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்ட போதும் இலங்கையில் இயங்கும் தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் குறிப்பாக சம்பந்தர் சுமந்திரன் அணியினருடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தது. சம்பந்தர் ஐயாவின் மறைவுக்குப் பின் சுமந்திரன் சாணக்கியன் அணியினரின் ‘ரிமோட் கொன்ரோலில்’ CTC இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் சாணக்கியன் அணியினரின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்பவே CTC பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதே வேளை இந்த அணியினரின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக நிதிப் பங்களிப்பையும் CTC யினரே தாராளமாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் நடைபெறுகின்ற நாடாளுமன்ற மாகாண சபை பிரதேச சபை தேர்தல்களுக்கு தமிழரசுக் கட்சிக்கு பிரதான நிதி வழங்குநர்களாக CTC செயற்படுகின்றது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது சம்பந்தன் சுமந்திரன் அணியினரால் கொழம்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவரது தெரிவு என்பது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் அரச சார்பான நிகழ்ச்சி நிரலுக்கு தங்களுடன் ஒத்துழைப்ப வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடனேயே சி.வி. விக்னேஸ்வரன் களம் இறக்கப்பட்டார்.

• சி.வி.விக்னேஷ்வரனுக்க குடைச்சல்.

தேர்தலில் அதி கூடிய வாக்குகளைப் பெற்று வட மாகாண முதலமைச்சராகிய சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் காலப் போக்கில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்பினார். சி.வி.விக்னேஷ்வரன் அவர்களின் இத்தகைய நிலைப்பாட்டினால் இவ் இரு பகுதியினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த தனது அணியினரான சயந்தன், ஆர்னால்ட், அஸ்மின் ஆகியோரைக் களத்தில் இறக்கி தொடர்ச்சியாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு குடைச்சலைக் கொடுத்து வந்தார். இதனால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போயிற்று. அதே வேளையில் குடைச்சலைக் கொடுக்க கருவியாகச் செயற்பட்ட சத்தியலிங்கம், அஸ்மின், ஆர்னால்ட் ஆகியோரை கனடாவுக்கு அழைத்து CTC கொளரவப்படுத்தி உபசரித்தது கொம்பு சீவி விட்டது. கனடா வந்த அஸ்மின் நிரந்தரமாக கனடாவிலேயே அரசியல் தஞ்சம் கோரி தங்கி விட்டார்.
அண்மையில் கனடாவில் நடைபெற்ற புத்தகத் திருவழாவின் முதன்மை ஏற்பாட்டாளர்களாக அஸ்மின் மற்றும் அரசியல் வியாபாரியும் புத்தக வியாபாரியுமான லண்டனில் வசிக்கும் பவுஸர் ஆகியோரோ இருந்துள்ளனர்.இவர்கள் இருவரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். இந்த புத்தக திருவிழாவுக்கு பிரதான பங்குதாரர்களாக CTC யே விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

• கூட்டமைப்பை சிதைத்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட உடைவுகளுக்கு பின்னணியில் CTC யினரே இருந்தனர். அதாவது சம்பந்தர், சுமந்திரன் அணியினரின் தான்தோன்றித்தனமான போக்கிற்கு CTC யினர் துணை போனது மாத்திரமன்றி தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக இன்று வரை துணை நிற்கின்றனர்.
தற்போது அதாவது போர் மௌனிக்கப்பட்ட பின் சம்பந்தர் ஐயா இல்லாத நிலையில் சுமந்திரன், சாணக்கியன் அணியினரின் ‘ரிமோட் கன்ரோலில்’ CTC யினர் இயங்கி வருகின்றனர். சுமந்திரன், சாணக்கியன் அணியினரின் செயற்பாடுகள் காரணமாகவே 75 வருடகால மூத்த அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சி நீதிமன்ற வாசலில் இன்று வரை நிற்கின்றது. இதனால் தமிழரசுக் கட்சியில் ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட முறையான தலைவரோ செயலாளரோ இன்றி பதில் தலைவர் பதில் செயலாளர் தலைமையில் தமிழரசுக் கட்சி வழி நடத்தப்படுகின்றது. தமிழரசுக் கட்சியில் தொடர்ச்சியாக எதேச்சதிகாரப் போக்கில் சுமந்திரன் செயற்படுவதானது தமிழரசுக் கட்சியை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளதுடன் தாயகத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைப் பயணத்தையும் சீர்குழைத்துள்ளது.

தற்போது தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைபற்றி சுமந்திரன் கதைப்பதானது அவரின் முதலமைச்சர் கனவினை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே.
இவர் தொடர்ச்சியாக மேற்கத்தைய அரசுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் முகவராக செயற்பட்டு வருகின்றார்.

மேற் கூறிய சுமந்திரன், சாணக்கியன் அணியினரின் சிபாரிசின் பேரிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிம் அவர்களும் சாணக்கியன் அவர்களின் அரசியல் காரியாலயத்தில் உதவியாளராகப் பணியாற்றியவரான தற்போதைய மட்டக்களப்பு மாநகர சபையின் துணை முதல்வரும் CTC யின் பொங்கல் விழாவுக்கு அழைக்கப்பட்டனர். தமிழர்களின் பொங்கல் விழாவுக்கும் ஹக்கீமுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. அப்படி வந்தவரும் பொங்கல் விழா மற்றும் மரபுரிமை திங்கள் தொடர்பாக அன்றி சம்பந்தம் இல்லாத விடயங்களைப் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.

• ‘இமாலயப் பிரகடனம்’

கனடா தமிழ் காங்கிரஸ் (CTC) சுயமாக இயங்கும் அமைப்பாகக் காட்டிக் கொண்டு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அணியினரின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்பவே ‘இமாலயப் பிரகடனத்தை’ அன்று அங்கீகரித்து கையெழுத்திட்டது. தமிழ் மக்களின் விருப்பத்திற்கும், அரசியல் அபிலாஷைகளுக்கும் மாறான நிலைப்பாட்டை CTC எடுத்தபோது இமாலயத்தை விட மேலான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் CTC பொது வெளியில் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இது குறித்து CTC பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய போதும் பொது வெளியில் CTC யின் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதற்கு தமிழர் தரப்பு தாயகத்திலும், புலத்திலும் இன்னும் தயாராக இல்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். இதன் எதிரொலியாக CTC யினர் கனடாவில் வருடாந்தம் நடத்தி வரும் ‘தெருத் திருவிழாவை’ நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தமிழர் விவகாரத்தில் CTC சர்ச்சைக்குரிய அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட கறை போகுமுன்பே மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி தமிழர் தரப்பின் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகி நிற்கின்றது. இந்த விமர்சனங்களும், கண்டனங்களும் கனடாவிலும், தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பூதாகரமாக எழும்பி நிற்கின்றன.

• பொங்கல் விழாவில் அரசியலா?

CTC தமிழ் மரபுத் திங்கள் நாளை ஜனவரி 24 ஆம் திகதி கனடாவில் கொண்டாடியது. கனடாவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

• ‘புலிகளின் புரியாணியும் ஹக்கீமும்’.

ஹக்கீம் அவர்கள் கனடா வருவதற்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின் போது அதன் தலைவர், தனது முஸ்லிம் சமையற்காரரரால் தமக்கு ஹலால் உணவு வழங்குவதற்காக அமர்த்தி புரியாணி சமைத்துக் கொடுத்து தம்மை உபசரித்ததாக சிலாகித்துப் பேசியதுடன், முஸ்லிம் ஒருவர் தலைவர் பிரபாகரனின் பிரத்தியேக சமையற்காரராக இருந்தது தெரிய வந்ததது என்றும் குறிப்பிட்டு புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரப்புரை செய்துவிட்டே கனடா வந்திறங்கினார். இந்த வீடியோ பரப்புரைக்கான மூல கருத்தாக்களாக சுமந்தின் சாணக்கியன் ஆகியோரே இருந்துள்ளனர்.
கனடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்புரையாற்றிய ஹக்கீம் அவர்கள் வட பகுதி முஸ்லிம்களை உடுத்த உடுப்புடன் விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை முதன் முதலாக கனடா நாடே கண்டித்து அறிக்கை விட்டது என்று குறிப்பிட்டார். தமிழர் திரு நாளாம் பொங்கல் விழாவுக்கும் வட பகுதி முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

• இனப் படுகொலையும் ஹக்கிமின் ஐ.நா. பரப்புரையும்

ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராக இருந்த போது இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிங்கள ஆட்சியாளர்களுக்காக பரப்புரை செய்தார். அதற்கு மாறாக இதே கனடா நாடுதான் ‘இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை’ என உலகத்திற்கே உரத்துக் கூறி பிரகடனப்படுத்தியது என்ற விடயத்தையும் பொங்கல் விழாவில் கூறி இருக்கலாமே.

ஹக்கீம் அவர்கள் வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி கனடாவில் கூறிய மறு நாள் (25.01.2026) வீரகேசரி ஞாயிறு பதிப்பில் ‘புலிகளின் புரியாணியும் முஸ்லிம்களின் கண்ணீரும்’ என்ற கட்டுரையின் இறுதிப் பகுதியில் ‘புலிகளுடனான சந்திப்பை சிலாகித்துப் பேசுகின்ற மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதே சந்திப்பில் கலந்து கொண்டதில் இருந்து இன்று வரை புலிகளை நேரடியாக விமர்சித்து வருகின்ற தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, அகதி வாழ்வை அனுபவித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அரசாங்கங்களுடன் உறவு கொண்டாடிய காலங்களில், இதுபோன்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நீதியை, தீர்வை பெற்றுக் கொடுக்கத் தவறிவிட்டனர் என்பது தனிக் கதை’ என குறிப்பிடப்பட்டுள்ளதை ஹக்கீம் அவர்களின் பார்வைக்கும் CTC யின் கவனத்திற்கும் முன் வைக்கின்றோம்.

ஹக்கீம் அவர்கள் உற்பட பல முஸ்லிம் தலைவர்கள் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகிய சிங்களத் தலைவர்களின் கீழ் செல்வாக்குமிக்க அமைச்சர்களாக இருந்த காலங்களில் வட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்வதில் கவனம் செலுத்தாது வட பகுதி முஸ்லிம்களுக்காக இன்று வரை நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஹக்கீம் அவர்கள் உற்பட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வடபகுதி முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பது ‘பிச்சைக்காரன் புண்ணாக’ அரசியலில் குளிர்காய பயன்படுகின்றது.

அதே வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடனான சந்திப்பின் போது வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு அவர் மன வருத்தம் தெரிவித்தார் என்றும் எனவே இந்த விடயம் குறித்து தொடர்ந்து பேசுவதானது தமிழ் முஸ்லிம் உறவினைப் பாதிக்கும் என்பதால் இது குறித்து பேசுவது அர்த்தமற்றது என்றும் ஹக்கீம் அவர்கள் தெரிவித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதியாக தங்களை ஏற்றுக் கொண்டார்கள் என்றும் தெரிவித்ததுடன் எதிர்காலப் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் தரப்பாக தம்மையே ஏற்றுக் கொண்டார்கள் என்றும் ஹக்கீம் அவர்கள் அவ் வேளையில் தெரிவித்ததையும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும்.
ஆனால் ஹக்கீம் அவர்களின் செயற்பாடுகள் இன்றுவரை அதற்கு மாறானதாகவே உள்ளது.

ஹக்கீமும் தமிழர் விவகாரமும்.

• கடந்த காலங்களில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழர் விவகாரத்தில் வகித்த பாத்திரம் என்ன?
• எதிர் காலத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழர் விவகாரத்தில் வகிக்கப் போகும் பாத்திரம் என்ன?
• சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை CTC அழைத்து கௌரவித்ததன் மூலம் தமிழ் மக்கள் பெறப் போகும் நன்மைகள் என்ன?
என்பன போன்ற பல கேள்விகளுக்கு CTC யின் விளக்கம் என்ன? என்பதுதான் தமிழ் மக்களின் கேள்விகளாகும்.

CTC யின் பார்வைக்கு சில விடயங்கள்.

• கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஊர்காவற் படையினர் அரச படைத்தரப்புடன் இணைந்து மேற் கொண்ட படுகொலைகள்.

Human Rights (NESOHR) and UTHR(J) indicate that thousands of Tamil civilians were killed or disappeared in the Eastern Province between 1990 and 1992 in operations involving state-backed militias.

During the Sri Lankan Civil War, particularly around the “Black September” period of 1990, several Tamil villages in the Eastern Province (Amparai, Batticaloa, and Trincomalee districts) were attacked, resulting in massacres and the destruction of homes, with reports implicating Muslim Home Guards (an auxiliary force armed by the state) often acting in coordination with the Sri Lankan Army. These attacks were largely seen as retaliatory violence following the Liberation Tigers of Tamil Eelam (LTTE) attacks on Muslim populations.

Key Documented Incidents Involving “Home Guards”
• :
Veeramunai Massacre (1990): Between June and August 1990, in the Amparai district, over 250 Tamil civilians were killed or disappeared, and over 2,000 homes were burned in Veeramunai and neighboring villages. Tamil civilians seeking refuge at the Veeramunai Pillaiyar Temple and a local school were attacked by Muslim home guards and security forces.

Tiraikerny Massacre (August 1990): On August 6, 1990, in Amparai district, at least 54 Tamil civilians, including women and children, were killed by Muslim Home Guards, who also set homes on fire.

Sathurukondan Massacre (September 1990): On September 9, 1990, in Batticaloa, more than 186 Tamil civilians—including infants, children, and pregnant women—were killed by the Sri Lankan Army with the support of Muslim Home Guards.

Savukkadi & Thalaivai Massacre (September 1990): On September 20, 1990, over 42 Tamil civilians were killed in a coordinated attack in Savukkadi and Thalaivai, with reports of 26 people burned alive and others executed by Muslim militias/home guards.

Puthukkudiyiruppu Massacre (September 1990): On September 21, 1990, in Batticaloa/Mullaitivu, 17 Tamil civilians were killed and 27 injured after being attacked with knives and swords by Muslim home guards and soldiers.

Polonnaruwa Massacres (April 1992): Following an attack on a Muslim village, 89+ Tamil civilians in Muthugal and Karapola were killed by Home Guards and police, with reports of 13 children among the victims.

Context and Consequences:
Retaliation & Communal Tensions: These attacks were part of a “tit-for-tat” cycle of violence in 1990, following the LTTE’s killing of over 100 Muslims in Kattankudy and Eravur.
State Involvement: Muslim Home Guard units were created and armed by the government in 1990 following appeals from Muslim leaders for protection, but were subsequently involved in these massacres, often alongside the army.
Expulsion and Displacement: These violent acts led to the massive displacement of Tamils from the southern Amparai District, with many fleeing towards the coast.
These events caused a deep, lasting rift between the Tamil and Muslim communities in the Eastern Province, with many of the targeted villages, such as in the southern Amparai area, experiencing a complete displacement of their Tamil populations at the time.

• ஹக்கீம் அவர்களும் அவருடன் சார்ந்த முஸ்லிம் தலைவர்களின் ஆசீர்வாதத்துடனேயே கிழக்கு மாகாணத்தில் மேற் குறிப்பிட்ட படுகொலைகள் போன்று பல தமிழின படுகொலைகளும் தமிழர்களின் நிலப் பறிப்பும் அரங்கேறியுள்ளன. மொத்தத்தில் முஸ்லிம் தரப்பும் அரச தரப்பும் கைகோர்த்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி உள்ளன.

• கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிவை முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் மறைந்த இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் தாரை வார்த்துக் கொடுத்தனர். முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமையவே இந்த ஏற்பாடு என அவ் வேளையில் கூறப்பட்டது. முதல் இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசும் எஞ்சிய இரண்டரை வருடங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பகிர்ந்து கொள்வதாக ஒப்பந்தம். ஆனால் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தத்தை மீறிய போது அதன் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கள் உடந்தையாக இருந்தது ஏன்?

• ரவூப் ஹக்கீம் அவர்கள் 2000 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக அமைச்சுப் பதவிகளை வகித்தவர். 2010 ஆம் அண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை ரவூப் ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். அவ் வேளையில் ஐ.நா. சென்று இனப்படுகொலை நடைபெறவில்லை என பரப்புரையில் ஈடுபட்டவர் என்பதையும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலங்களில் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டிருக்கவில்லை என்பதை CTC யால் உறுதிப்படுத்த முடியுமா?

• மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக 18வது சரத்தினை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த சரத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. இந்த சரத்தை நிறைவேற்ற போதுமான வாக்குகளை கொண்டிருக்காத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சியில் (UNP) இருந்து கொண்டு பணத்துக்காக வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இச் செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சரத்துடன் சர்வாதிகாரப் போக்கில் செயற்படுவதற்கு வழிவகுத்தது. இந்த செயற்பாடானது இலங்கையின் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிப்பதாகவும் அமைந்தது.

• ஹக்கீம் அரசாங்கங்களில் தொடர்ச்சியாக வகித்த பதவிகள்.

ஹக்கீம் அவர்கள் 1994 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை ஆட்சிபீடம் ஏறிய அனைத்து கட்சிகளிலும் அமைச்சராகவும் மற்றும் முக்கிய பதவிகளிலும் அங்கம் வகித்துள்ளார் என்பதை கீழ் வரும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
1.Minister of City Planning, Water Supply and Higher Education (2019-07-29 – 2019-11-21)
2.Minister of City Planning, Water Supply and Higher Education (2018-12-20 – 2019-06-03)
3.Minister of City Planning and Water Supply (2015-09-04 – 2018-10-26)
4.Minister of Urban Development, Water Supply and Drainage (2015-01-12 – 2015-06-26)
5.Minister of Justice and Labour Relations (2010-11-22 – 2014-12-28)
6.Minister of Posts & Telecommunication (2007-01-28 – 2007-12-12)
7.Minister of Port Development and Shipping ; Minister of Eastern Development and Muslim Religious Affairs, (2001-12-12 – 2004-02-07)
8;Minister of International Trade & Commerce, Muslim Affairs & Shipping Development (2000-10-19 – 2001-06-19)
9.Deputy Chairman of Committees (2000-09-14 – 2000-10-10)
10.Deputy Chairman of Committees (1994-08-25 – 2000-08-18)

• ரவூப் ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராக இருந்த போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தைக் காட்டினார் என்று கூற முடியுமா?

• நீதி அமைச்சராகவும் மற்றும் செல்வாக்குமிக்க அமைச்சராகவும் இருந்த ரவூப் ஹக்கீம் அவர்கள் குருக்கள் மடம் உற்பட முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகளுக்கான விசாரணைகளைக் கோராது மௌனம் காத்த அவர் செம்மணி விவகாரத்தில் சான்றுகள் வெளிக் கிளம்பிய போது குருக்கள்மட படுகொலை குறித்து பெரிதளவில் பேச வந்ததன் மர்மம் என்ன? தற்போது குருக்கள் மடம் விவகாரத்தை ரவூப் ஹக்கீம் அவர்கள் கிடப்பில் போட்டுள்ளார்.

• கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி ரவூப் ஹக்கீம் அவர்கள் வாய் திறக்காதது ஏன்? வடக்கு முஸ்லிம்கள் குடியேற்றப்பட வேண்டுமென்பதில் தமிழர் தரப்பு ஏகோபித்த சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர். இது பற்றி பேசும் ரவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தை முன் நின்று செய்திருக்க வேண்டும்.

• கிழக்கு மாகாணத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் திராய்க்கெணி உற்பட முஸ்லிம்களால் கபளீகரம் செய்யப்பட்டது பற்றியோ அல்லது அந்த கிராமங்களில் தமிழ் மக்களை மீள் குடியேற்றுவது பற்றியோ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பேச மறுப்பது ஏன்.

• ஓட்டமாவடியில் காளி கோவிலை அத்திவாரத்துடன் பெயர்த்து வீசி அவ்விடத்தில் ‘மாhக்;கட்’ கட்டியதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகபாடியான ஹிஸ்புல்லா குறித்து பேச மறுப்பது ஏன்?

• முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் இலங்கையின் படைத் தரப்புடன் இணைந்து பணியாற்றிய ஊர்காவல் படையினரும் கிழக்கு மாகாணத்தில் செய்த தமிழ் இன படுகொலைகள் குறித்து ரவூப் ஹக்கீம் அவர்கள் மௌனம் காப்பதேன். குருக்கள் மட விவகாரம் போன்று இந்த தமிழ் இன படுகொலைகள் குறித்தும் நீதி விசாரணையை ஹக்கிம் அவர்கள் கோராதது ஏன்?

• கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த விடாது இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் அவர் சார்ந்த முஸ்லிம் காங்கிரசும்தான்; என்பதை அனைவரும் அறிவர்.

இத்தகைய ஒருவரால் தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டி எழுப்ப முடியுமா?

CTC யே உங்களின் செயற்பாடுகள் யாருக்காக?
தமிழரசுக் கட்சிக்குள் முளை விட்டுள்ள சுமந்திரன் – சாணக்கியன் அணியினரின் அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் CTC யை பலிக்கடாவாக்க வேண்டுமா? இந்த அணியினருடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் உரிமையையும் தன்மானத்தையும் பேரினவாதிகளுக்கு காணிக்கையாக்குவதாகவே முடியும்.
இந் நிலையில் CTC யின் ஒவ்வொரு தீர்மானமும் நகர்வும் கேள்விக்குள்ளாக்கப்டுவது தவிர்க்க முடியாததாகும்.
CTC அமைப்பிற்குள் உள்ள சிலர் புலிகள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகளை மேற்கோள் காட்டி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை நியாயப்படுத்த முயல்கின்றனர். அன்று புலிகள் அமைப்புடன் கூடிக் குலாவி விட்டு புலிகள் இல்லாத நிலையில் இன்று தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு குறிப்பாக ரவூப் ஹக்கீம் போன்றவர்களுடைய செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வது ‘வேசித்தன அரசியலாகும்’. இது போன்ற அரசியல் செயற்பாடுகள் தாயகத்திலும், புலத்திலும் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பேரினவாத சக்திகளின் கைகளைப் பலப்படுத்துவதாகவே முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது இயங்கு நிலையில் இல்லை. புலிகள் இல்லாத தமிழ் உலகிகில் தமிழ் மக்கள் எத்திசை நோக்கி நகர வேண்டுமென்பது குறித்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அதே வேளையில் “State – Sponsored Muslim Terrorism” குறித்து அதனை தமிழர்களே நியாயப்படுத்துவது தகுமா?
சிங்களத் தரப்பு ‘அரச பயங்கரவாதத்தின்’ மூலம் சாதிப்பதை முஸ்லிம் தரப்பு “State – Sponsored Muslim Terrorism” மூலமும், தாம் பெற்ற அமைச்சுப் பதவிகள் மூலமும் கிழக்கு மாகாண தமிழர்களைக் கொன்றும், தமிழ் முஸ்லிம் கிராமங்களில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் கிழக்கு மாகாணத்தை சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம் பயங்கரவாதமும் கபளீகாரம் செய்து கொண்டிருக்கின்றது. இது குறித்து தமிழ் மக்கள் காலம் தாழ்த்தாது பேசியாக வேண்டியுள்ளது.
• CTC யினர் 2009க்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான சக்திகளின் நோக்கங்களுக்குத் துணை புரிகின்றனர்.
• CTC யினர் கடந்தகால தமது சொந்த தவறுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குஎதிரான சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
• மொத்தத்தில் மகா பாரதத்தில் சகுனி போன்று தமிழர் விவகாரத்தில் நவ யுக சகுனியாக CTC பாத்திரமேற்றுள்ளது என்பதையே அதன் செயற்பாடுகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் மூலம் CTC சாதிக்க முயல்வது என்ன?
CTC யின் செயற்பாடுகள் தமிழின விடுதலை நோக்கியதா அல்லது
தமிழினத்தை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதை நோக்கியதா?
CTC யே தமிழ் மக்களுக்கு பதில் கூறவும்!2CTC யே உங்களின் செயற்பாடுகள் யாருக்காக?
தமிழரசுக் கட்சிக்குள் முளை விட்டுள்ள சுமந்திரன் – சாணக்கியன் அணியினரின் அரசியல் இலாபங்களுக்காக தொடர்ந்தும் CTC யை பலிக்கடாவாக்க வேண்டுமா? இந்த அணியினருடன் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின் உரிமையையும் தன்மானத்தையும் பேரினவாதிகளுக்கு காணிக்கையாக்குவதாகவே முடியும்.
இந் நிலையில் CTC யின் ஒவ்வொரு தீர்மானமும் நகர்வும் கேள்விக்குள்ளாக்கப்டுவது தவிர்க்க முடியாததாகும்.
CTC அமைப்பிற்குள் உள்ள சிலர் புலிகள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகளை மேற்கோள் காட்டி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளை நியாயப்படுத்த முயல்கின்றனர். அன்று புலிகள் அமைப்புடன் கூடிக் குலாவி விட்டு புலிகள் இல்லாத நிலையில் இன்று தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு குறிப்பாக ரவூப் ஹக்கீம் போன்றவர்களுடைய செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்வது ‘வேசித்தன அரசியலாகும்’. இது போன்ற அரசியல் செயற்பாடுகள் தாயகத்திலும், புலத்திலும் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பேரினவாத சக்திகளின் கைகளைப் பலப்படுத்துவதாகவே முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது இயங்கு நிலையில் இல்லை. புலிகள் இல்லாத தமிழ் உலகிகில் தமிழ் மக்கள் எத்திசை நோக்கி நகர வேண்டுமென்பது குறித்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அதே வேளையில் “State – Sponsored Muslim Terrorism” குறித்து அதனை தமிழர்களே நியாயப்படுத்துவது தகுமா?
சிங்களத் தரப்பு ‘அரச பயங்கரவாதத்தின்’ மூலம் சாதிப்பதை முஸ்லிம் தரப்பு “State – Sponsored Muslim Terrorism” மூலமும், தாம் பெற்ற அமைச்சுப் பதவிகள் மூலமும் கிழக்கு மாகாண தமிழர்களைக் கொன்றும், தமிழ் முஸ்லிம் கிராமங்களில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் கிழக்கு மாகாணத்தை சிங்கள பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம் பயங்கரவாதமும் கபளீகாரம் செய்து கொண்டிருக்கின்றது. இது குறித்து தமிழ் மக்கள் காலம் தாழ்த்தாது பேசியாக வேண்டியுள்ளது.
• CTC யினர் 2009க்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான சக்திகளின் நோக்கங்களுக்குத் துணை புரிகின்றனர்.
• CTC யினர் கடந்தகால தமது சொந்த தவறுகளில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்குஎதிரான சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
• மொத்தத்தில் மகா பாரதத்தில் சகுனி போன்று தமிழர் விவகாரத்தில் நவ யுக சகுனியாக CTC பாத்திரமேற்றுள்ளது என்பதையே அதன் செயற்பாடுகள் அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் மூலம் CTC சாதிக்க முயல்வது என்ன?
CTC யின் செயற்பாடுகள் தமிழின விடுதலை நோக்கியதா அல்லது
தமிழினத்தை வேருடன் பிடுங்கிச் சாய்ப்பதை நோக்கியதா?
CTC யே தமிழ் மக்களுக்கு பதில் கூறவும்!

  • ஆசிரியர் குறிப்பு- கனடாவிலிருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட இந்த கட்டுரையை தமிழ்பக்கம் பிரசுரித்துள்ளது. இந்த கட்டுரையிலுள்ள கருத்துக்கள் தமிழ்பக்கத்தின் கருத்துக்கள் அல்ல. திறந்த உரையாடல் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கத்தில் இதனை பிரசுரித்துள்ளோம். இந்த கட்டுரைக்கு மாறான அபிப்பிராயங்கள் இருந்தால், அதை தமிழ் பக்கத்திற்கு அனுப்பினால்- அதனையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி நகர 4 வழிப்பாதையை மேலும் விஸ்தரிக்க திட்டம்

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி...

திருகோணமலை சட்டவிரோத புத்தர் சிலை விவகாரம்: பிக்குகளுக்கு பிணை!

பிணையில் விடுவிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும்...

அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை வழக்கு: 12 பேருக்கு மரண தண்டனை!

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்