யாழில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 17 வயதானவர் போதைப்பொருள் பாவித்திருந்தார்!

Date:

வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் வீதிக்காவல் கடடையிலிருந்த பொலிசாரின் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முற்பட்ட ஹைஏஸ் வாகனம் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், வாகனத்தை செலுத்திச் சென்ற 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹைஏஸ் வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.

அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அந்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்கனர்.

ஆனால் பொலிசாரின் உத்தரவை மீறி வாகனம் அதிவோகமாக தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து, சற்று தொலைவிலுல் வீதிக்காவல் கடமையிலிருந்த பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர்கள் மறித்த போதும், வாகனம் தப்பிச் சென்றது. மீண்டும் பொலிசார் வாகனத்தை வழிமறித்த போது, மோதி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டது. இதன்போது, பொலிசார் வாகனத்தின் பின்பக்கமிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். வாகனத்தை செலுத்திச் சென்ற 17 வயது இளைஞன் திரும்பிப் பார்த்த போது, அவரது நெற்றியில் துப்பாக்கிச்சூடு பட்டது.

கற்பகப் பிள்ளையார் கோவில், வட்டு வடக்கு, சித்தன்கேணியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயஸ் என்ற 17 வயதுடையவரே காயமடைந்தார்.

அவரை, பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதே நேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பயணித்த வாகனத்தின் பின் பகுதி ஆசனங்கள் அகற்றப்பட்டிருந்தது. அவர்கள் மாடு திருடும் நோக்கத்தில் சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 17 வயதுடையவரின் உடல் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, அந்த நபர், ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, வாகனத்திலிருந்து கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் நாளை போதைப்பொருள் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்