சுவிஸ் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்!

Date:

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கண்டோன் பாராளுமன்ற தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட கந்தசுவாமி விநாயகமூர்த்தி (குமார்) தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து 42 ஆண்டுகளாக சுவிட்ஸர்லாந்தில் வசித்து வரும் தொழில் முனைவோரான கந்தசுவாமி விநாயகமூர்த்தி தேர்தல் அரசியலில் களமிறங்குகிறார்.

சுவிட்சர்லாந்தில் பேர்ண் மத்திய தெற்கு தொகுதியில் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு ஆரம்பத்தில் உதவி செய்த கட்சியாகவும் வெளிநாட்டை பூர்வீகமாகக் கொண்ட பலர் அந்த சுதந்திர ஜனநாயகக் கட்சியில் உள்ளார்கள். அந்த வகையில் எதிர்கால சந்ததியினருக்கு அகதி என்ற பேச்சே இல்லை. அவ்வாறான நிலையில் தான் தேர்தலில் களமிறங்கியுள்ளேன் . புலம்பெயர் தமிழர்களை உடன்பிறப்பாக நான் கருதி வழிகாட்டியாக செயல்படுவேன் – என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காலியில் இருவர் வெட்டிக்கொலை

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர்கள் சிக்கின!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்