இறந்தவரின் உடலை சென்று பார்வையிட முடியாத நிலையில் மல்லாவி வைத்தியசாலையின் பிரேத அறை!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச சேவையான மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளும் இடமாக மல்லாவி ஆதார மருத்துவமனை காணப்படுகின்றது

இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை புனரமைப்பு செய்யப்படாமையினால் தள மேடை பாதை இன்றி பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையானது அதிகஸ்ட பகுதிகளுக்கு சேவையாற்றும் ஒரு இடைநிலை ஆதார வைத்தியசாலையாகும்

குறித்த பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது உயிரிழப்புகள் ஏற்படின் மல்லாவி வைத்திய சாலையிலேயே உடலம் வைக்கப்படுவது வழமை

இந்த நிலையில் நீண்ட ஆண்டுகாலமாக வைத்தியசாலையில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் வீதி தள மேடை பாதை புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் ,இதனால் உடலங்களை தள்ளுவண்டிகள் மூலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லும் போது சீரற்ற தள மேடை பாதையினால் அரச பணியாளர்கள் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவித்தனர்

மருத்துவமனையிலிருந்து 100M மீட்டார் தூரத்தில் உள்ள குறித்த பிரேத அறை உள்ள வீதியினை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது நோயாளார் நலன்புரி சங்கமோ புனரமைப்பு செய்வதில் அக்கறை காட்டவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாத ஆவணம் தயாராகிவிட்டது- ஜெலன்ஸ்கி

உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த அமெரிக்க ஆவணம் முழுமையாக தயாராக உள்ளது,...

பாடசாலை மாணவி குழந்தை பிரசவம்: தாயாரின் காதலன் கைது!

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி...

15 வயது வீட்டு பணிப்பெண்ணை சீரழித்தவர் கைது!

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்