விஜய்யிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை – குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பா?

Date:

டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் நேற்று ஆஜரான தவெக தலை​வர் விஜய்​யிடம் 6 மணிநேரம் விசா​ரணை நடத்தப்​பட்​டது. பிப்​ர​வரியில் தாக்​கல் செய்​யப்பட உள்ள குற்​றப்​பத்​திரிக்​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட வாய்ப்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்​லி​ சிபிஐ தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 12-ம் தேதி ஆஜரா​னார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவர் ஆஜரா​னார். காலை 10.30 மணிக்கு விசா​ரணை தொடங்​கியது. கூட்ட நெரிசல் தொடர்​பாக அதி​காரி​கள் அடுக்​கடுக்​காக கேள்வி​களை எழுப்​பினர்.

குறிப்​பாக, கூட்​டம் கட்​டுக்​கடங்​காமல் போன பிறகும் ஏன் உரையைத் தொடர்ந்​தீர்​கள், தாமதத்​துக்கு திட்​ட​மிட்ட காரணம் எது​வும் உண்​டா, தாமதமாகும் தகவலை மக்​களுக்கு ஏன் அறிவிக்​க​வில்​லை, போலீ​ஸார் கொடுத்த பாது​காப்பு வழி​முறை​கள் மீறப்​பட்​ட​தா என்​பது உட்பட பல்​வேறு கேள்விகளை அதி​காரி​கள் எழுப்​பினர். அதற்கு விஜய் விளக்​கம் அளித்​த​தாக தெரி​கிறது.

‘காவல் துறை வழங்​கிய அனைத்து பாது​காப்பு நெறி​முறை​களை​யும் முறை​யாக பின்​பற்​றினேன். ஆனால், கூட்​டத்தைகட்​டுப்​படுத்த போதிய அளவில் போலீ​ஸார் நியமிக்​கவில்​லை’ என்று விஜய் கூறிய​தாக தெரி​கிறது. சில கேள்வி​களுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க விஜய் தரப்​பில் கூடு​தல் அவகாசம் கேட்​கப்​பட்​ட​தால், அவர் மீண்​டும் விசா​ரணைக்கு அழைக்​கப் படலாம் என்​றும் தெரி​கிறது. விசா​ரணை மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்​தது. பின்னர் அங்​கிருந்து விஜய் புறப்​பட்​டார்.

பிப்​ர​வரி​யில் இந்த வழக்​கின் குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்ய சிபிஐ தீவிரம் காட்டி வரு​கிறது. குற்​றப்​பத்​திரி​கை​யில் விஜய் பெயரும் சேர்க்​கப்பட அதிக வாய்ப்பு உள்​ள​தாக சிபிஐ வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இதுகுறித்து சிடிஆர் நிர்​மல்குமார் டெல்லியில் கூறும்போது, விஜய்​யிடம் விசா​ரணை முடிந்தது.

இனி சம்​மன் எது​வும் இல்லை. அவரது பிரச்​சாரம் திட்டம் தொடர்​பான தகவல் களை சிபிஐ கேட்டு தெரிந்து கொண்​டது. குற்​றப்​பத்​திரி​கையில் விஜய் பெயர் இடம்பெறு​வது, கைது என ஊடகங்​களில் பரவி வரும் தகவல்​ முற்​றி​லும்​ தவறு. இவை அனைத்​தும்​ தி​முக​வால் பரப்​பப்​படும்​ வதந்​தி’’ என்​றார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்