4 வயது மகளுக்கு பாலியல் சேட்டை விட்ட தந்தைக்கு விளக்கமறியல்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயது 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (16) உத்தரவிட்டார்.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் குறித்த நபர் அவரது 4 வயது 8 மாதம் கொண்ட சிறுமி மீது பாலியல் சேட்டை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து தாயார் பொலிஸ் நிலையம் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (15) முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரை இன்று வெள்ளிக்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 29ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  • கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிரிக்கெட் போட்டிக்கு சென்ற மாணவர்கள் பேருந்து விபத்தில் பலி

கண்டி, புனித சில்வெஸ்டர் கல்லூரிக்கும் வித்யார்த்தா கல்லூரிக்கும் இடையே நடைபெறும் வருடாந்திர...

ஊழல் குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்கவுக்கு ரூ.25 மில்லியன் அபராதம்!

கொலன்னாவவின் மீத்தோட்டமுல்ல பகுதியில் நிலத்தை மீட்க அனுமதி வழங்குவதற்காக ஒரு தொழிலதிபரிடம்...

இராணுவத்தளபதியை பணியிலிருந்து விடுவித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்