மின்தடை ஏற்படலாம்

Date:

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான மழையுடன் பலத்த காற்று வீசும் எனவே மின்தடை ஏற்பட கூடிய வாய்ப்பு ஏற்படும் இதனை கொண்டு மக்கள் தயார்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

சீரற்ற காலநிலை தொடர்பாக அரசாங்க அதிபர் இன்று வியாழக்கிழமை (8)அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

வளிமண்டல திணைக்களத்தின் ஏதிர்வு கூறலின் பிரகாரம் வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று 8ம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதி வரையான சனிக்கிழமை வரையில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

எனவே இதன் காரணமாக இடைக்கிடையே மின்சார தடை ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகிறது எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தயார்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்வதோடு வானிலை அறிக்கை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்