இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூ.8 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

Date:

வே​தா​ரண்​யம் அருகே இலங்​கை​யில் இருந்து கடத்​திவரப்​பட்ட ரூ.8 கோடி மதிப்​பிலான 6 கிலோ தங்​கக் கட்​டிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. கடத்​தலில் ஈடு​பட்ட ஒரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இலங்​கை​யில் இருந்து படகு மூலம் நாகை மாவட்​டம் வேதா​ரண்​யம் கடலோரப் பகு​திக்கு தங்​கம் கடத்​தப்​பட்டு வரு​வ​தாக, காவல் துறை​யின் நுண்​ணறி​வுப் பிரிவு அதி​காரி​களுக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து, வேதா​ரண்​யம் கடலோரப் பகு​தி​யில் க்யூ பிரிவு ஆய்​வாளர் ராஜேஷ் தலை​மையி​லான போலீ​ஸார் நேற்று தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, ஆறு​காட்​டுத்​துறை​யில் இருந்து இருசக்கர வாக​னத்​தில், சந்​தேகத்​துக்கு இடமான வகை​யில் சென்​றவரை போலீ​ஸார் பின்​தொடர்ந்​தனர். விழுந்​த​மாவடி அருகே வேதா​ரண்​யம்- நாகை பிர​தான சாலை​யில் சென்​று​கொண்​டிருந்த அவரைப் பிடித்து போலீ​ஸார் சோதனை​யிட்​ட​போது, ரூ.8 கோடி மதிப்​பிலான 6 கிலோ தங்கக் கட்​டிகள் வைத்​திருந்​ததைக் கண்​டறிந்​தனர்.

தொடர்ந்​து, அவரிட​மிருந்து தங்​கக் கட்​டிகளை பறி​முதல் செய்த போலீ​ஸார், அவரிட​மிருந்த தங்​கக் கட்​டிகள் மற்​றும் அவர் ஓட்​டிவந்த இருசக்கர வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​து, தோப்​புத்​துறை​யில் உள்ள சுங்​கத் துறை கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் ஒப்​படைத்​தனர். அங்கு நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், கடத்​தலில் ஈடு​பட்​ட​வர் நாகை நெல்​லுக்​கடை மாரி​யம்​மன் கோயில் அருகே வசித்து வரும் சிவக்​கு​மார்​(42) என்​பதும், தங்​கக் கட்​டிகள் இலங்​கை​யில் இருந்து கடத்​திவரப்​பட்​டவை என்​பதும் தெரிய​வந்​தது. இது தொடர்​பாக சுங்​கத் துறை​யினர் வழக்​குப் பதிவுசெய்​து, தங்​கக் கடத்​தலில் ஈடு​பட்ட சிவக்​கு​மாரை கைது செய்​தனர். இவர், 2017-ம் ஆண்டுராம​நாத​புரத்​தில் நடை​பெற்ற தங்கக் கடத்​தல் வழக்​கிலும்தொடர்​புடைய​வர் என்​பது தெரிய​வந்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்