யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில், அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல்வீட்டுக்காரர்களுக்கு இடையே முரண்பாடு நிலவியுள்ளது. வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலடியில் நின்று பியர் அருந்திய போது, இரண்டு குடும்பஸ்தர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தனது கணவரை தாக்கியதாக குறிப்பிட்டு, அயல்வீட்டு பெண் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அயல்வீட்டுக்காரரான 36 வயதானவர் காயமடைந்தார்.
அவரது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் காயமடைந்தார். அது ஆபத்தான காயமில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவான பெண், நேற்று சட்டத்தரணி ஊடாக பொலிசாரிடம் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்ட பெண்ணை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



