4 Kg கஞ்சாவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரதேசசபை உறுப்பினர் கைது!

Date:

யாழ்ப்பாணத்தில் நான்கு கிலோகிராம் கஞ்சாவுடன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றையதினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்