முதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவு!

Date:

கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடிய ஊடக கற்கைகள் வள நிலையத்தில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் தலைமையில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்த் (ஜே.பி) யின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன் போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா திருவுருவப் படத்திற்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியன் அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாரை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்ட அதனைத் தொடர்ந்து அன்னாரது உறவினரான அக்கரைப் க்கியன் அன்னாரது மறைவு தொடர்பான பேருரையும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

கொலையாளியின் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கைது!

பாதாள உலகத் தலைவன் 'லொகு பட்டி' என்பவனுக்காக கூலிப்படையினராகச் செயல்பட்டதாகக் கூறப்படும்...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹூதிகள்

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகள், யேமனின் இடைக்காலத் தலைநகரான ஏடனில் உள்ள...

ட்ரம்ப்- ஜெலென்ஸ்கி மோதல் முற்றுகிறது!

அமெரிக்க-ரஷ்ய டீசல் ஒப்பந்தம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்