இன்று காலை முல்லைத்தீவு நகரில், செலான் வங்கியின் முன்பாக உள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒரு புளியமரம் சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டடிருந்தது.
இவற்றை விரைந்து அகற்றும் பணியில் வவீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணியாளர்கள், பிரதேச சபை பணியாளர்கள், மின்சார சபை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவுடன் இணைந்து உடனடியாக விழுந்த மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பின் தொலைபேசி கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதுடன் தற்போது அவற்றை விரைந்து மீள் நிலைமைக்குக் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தினால் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்க் கொண்டு வான்கள், லாரிகள் போன்ற எந்தவொரு பெரிய வாகனங்களும் இந்தச் வீதியை பயன்படுத்த வேண்டாம் என்பதனை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.




