மட்டக்களப்பில் அடை மழை: பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு

Date:

சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேர் வீட்டை வெட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மழை சீரற்ற காலநிலையால் தொடர்ந்து பெய்து வருகிறது இந்நிலையில் மாவட்டதிலுள்ள குளங்கள் நிரம்பி வருகின்றதுடன் தாழ் நிலப் பிரதேசங்கள் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் காற்றினால் பல பிரதேசங்களில் வீதிக்கு குறுக்கே மரங்கள் முறிந்து வீந்தன இவற்றை அந்தந்த பிரதேச பிரதேச சபையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.

இதேவேளை இந்த அடைமழை அடுத்து கிரான் தாம்போதிக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல்லுக்கும் இடையே உள்ள போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

அதேவேளை மட்டக்களப்பு;பு வவுணதீவு வலையிறவு பாலம் மற்றும் மட்டக்களப்பு சுமைதாங்கி தாம்போதிகளின் மேலால் வெள்ள நீர் பாய்ந் தோடுவதால் மட்டக்களப்பு நகருக்கம் வவுணதீவுக்கும் இடையேயும் புதூருக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு வெல்லாவெளி தாம்போதியினால் வெள்ளநீர் பாய்ந்தோடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையடுத்து அந்த பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடை மழையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதை தவிர்த்து உள்ளதுடன் வீதி போக்குவரத்துக்கள் குறைவடைந்துள்ளது டன் மக்களின் இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் தொடர்ந்து காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்