வவுணதீவில் சிக்கிய கசிப்பு கோட்டை

Date:

வுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பெரிய காளை கோட்டை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (16) முற்றுகையிட்ட பொலிசாரை கண்டு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம் வாய்காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பரல்கள் கொண்ட 3400 லீற்றர் கோடாவை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வயல் பகுதியை அண்டிய வாய்க்காலில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்

பொலிசாரை கண்டு உற்பத்தியில்; ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதையடுத்து வாய்க்கால் நீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாவுடனான 17 பரல்களை மீட்டு கோடாவை அங்கு ஊற்றி அழித்து பரல்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து கொண்டுவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்