கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஆனந்தன் நேற்று (21) கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் வரை தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான ஆனந்தன், ஜே.கே.பாயின் நெருங்கிய கூட்டாளி, மேலும் கடல் வழியாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் யாழ்ப்பாண பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார்.
செவ்வந்தியை இந்தியாவுக்கு அனுப்பியது தொடர்பான விசாரணை தொடங்கியதிலிருந்து ஆனந்தன் கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் பதுங்கி இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றப்பிரிவினர் நடத்திய விசாரணையின் போது ஆனந்தன் கைது செய்யப்பட்டு தற்போது நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
யாழ்ப்பாணக் கடற்கரையிலிருந்து இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குச் சென்றிருந்தார். மூன்று ஆண்களுடன் ஒரு சிறிய படகில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
செவ்வந்தியை ஏற்றிச் சென்ற படகு இந்தியாவை அடைய ஐந்து நாட்கள் ஆனது. படகு கடற்படை பாதுகாப்புப் படையினரைத் தவிர்த்து இந்தியாவை பாதுகாப்பாக அடைந்தது, அங்கு ஜே. கே. பாய் வந்து செவ்வந்தியை பாறுப்பேற்றார்.




