முன்னணியின் தேசிய அமைப்பாளரிடம் ரிஐடி விசாரணை

Date:

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்; இன்று புதன்கிழமை (22) ஆஜராகி சுமார் 5.00 மணித்தியாலம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18 ம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் முகநூலில் கட்சியின் தலைவர் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றிய தாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு கடிதத்தை வழங்கினர்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5.00 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் அதற்கான வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்