அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

Date:

அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஒஃப் சயன்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று வெளி​யிட்​டது. அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது.

ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்​ணிய துகள்​கள் சுவரை துளைத்து மறு​பக்​கம் செல்​கின்​றன. இதுவே குவாண்​டம் ஊடுரு​வல் என்று அழைக்​கப்​படு​கிறது. கடந்த 1984, 1985ஆம் ஆண்​டு​களில் குவாண்​டம் ஊடுரு​வலை 3 விஞ்​ஞானிகளும் அறி​வியல்​பூர்​வ​மாக நிரூபித்​தனர். இந்த சாதனைக்​காக அவர்​கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மருத்​து​வம், விண்​வெளி, பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள், சூப்​பர் கம்ப்​யூட்​டர் தயாரிப்பு உட்பட பல்​வேறு துறை​களில் குவாண்​டம் ஊடுரு​வல் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி சட்டத்தரணி தகுதிக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்!

ஜனாதிபதி சட்டத்தரணிகள் (PC) நியமனம் குறித்த திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜனாதிபதி...

நாடு திரும்பிய பணிப்பெண்ணுக்கு எமனான டிப்பர்

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக...

உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்