சம்பத் மன்னம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Date:

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மாங்குளத்தில் இருவர் அடித்துக்கொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர்...

ஜானகி சிறிவர்த்தனவுக்கு விளக்கமறியல்

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6...

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாகச் செயற்பட வேண்டும்-உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்